கனமழை எதிரொலி.! பவானி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

Bhavanisagar Dam

கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால் பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா பகுதிகள், நீலகிரி மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அங்கு பில்லூர் அணை நேற்று 84அடியாக இருந்த நீர் கொள்ளளவு, இன்று 94அடியாக உயர்ந்துள்ளது . இதனால் அணை நிரம்பி பவானி சாகர் அணைக்கு நீர் திறந்துவிடபடுகிறது .

இதனால், பவானிசாகர் அணையினை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணைக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவை, நீலகிரி பகுதிகளுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 38 செ.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்