விடாது பெய்த அடைமழை… வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி.! 

INDvWI Test series

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-0 என்கிற வெற்றி கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி,  மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே முதல் டெஸ்ட் முடிந்து அதில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருந்தது இந்தியா. இதனை தொடர்ந்து  நேற்று இரவு இரண்டாவது ஆட்டமும் அடைமழையுடன் நிறைவடைந்தது.

இரண்டாவது டெஸ்டில் முதலில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் எடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த முதல் இன்னிங்சை சற்று தடுமாறி விளையாடி பத்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரத்ஒயிட் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரண்டாவது இன்னிசை ஆடிய இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் இருக்கும் நிலையில் டிக்ளர் செய்தது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 38 ரண்களும் அடித்து அவுட் ஆகினர். சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோர் 29 மற்றும் 52 ரன்கள் எடுத்திருந்தனர்.

365 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று முன்தினம் நான்காவது நாள் முடிவு வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று  கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படும் என்ற நிலை இருந்தது.

ஆனால் நேற்று இரவு முதல் விடாது பெய்த மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இருந்தும் ஏற்கனவே ஒரு போட்டியில் இந்தியா அணி வென்றதால் 1-0 என்கிற வெற்றி கணக்கில் இந்தியா அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய ஆட்டம் முழுதாக நடைபெறாத காரணத்தால் தொடர் நாயகன் விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்