மதுபானம் பரிமாற உரிமம் – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
மதுபானம் பரிமாறுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாட்டில் கருத்தரங்கம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாறும் முடிவு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணையின் போது, விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பி, சட்டமன்றத்தில் வைக்கப்படாத விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
எனவே, சர்வதேச கருத்தரங்கம், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாறுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானம் பரிமாற உரிமம் தரும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதா என பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது தலைமை நீதிபதி அமர்வு.