ட்விட்டரின் பெயரை மாற்றிய எலான் மஸ்க்..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

twitter logo sad

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் ட்விட்டர் செயலி உருவாக்கப்பட்டது. பிறகு, உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் 2022ம் ஆண்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இந்த சமயத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை அவரது தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ் கார்ப்பின் லோகோவை மையமாக வைத்து எக்ஸ் (X) என்று மாற்ற முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதன்படி, தற்பொழுது நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் (X) என மாற்றியுள்ளார்

எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையால் குழப்படைந்த ட்விட்டர் பயனர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி, எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் சிலர் புதிய லோகோவைக் கூட உருவாக்கி பதிவிடுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்