அடுத்த 25 ஆண்டுகள் முக்கியம்.. 70,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியபின் பிரதமர் பேச்சு!

PM Modi

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும் என பிரதமர் மோடி பேச்ச.

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் 44 இடங்களில் இருந்து தேர்வான 70,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி. இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, அரசு ஊழியராக இருப்பது நல்ல வாய்ப்பு.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். வங்கித் துறை வலிமையானதாகக் கருதப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை இல்லை. முந்தைய அரசாங்கத்தின் போது நமது வங்கித் துறை அழிவைச் சந்தித்துள்ளது. இன்று, டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று இல்லை.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பவர்கள் வங்கிகளுக்கு போன் செய்து ஆயிரக்கணக்கான கோடி கடன்களை பெற்றனர், இந்த கடன்கள் திரும்ப செலுத்தப்படவில்லை. இந்த ‘போன் பேங்கிங் மோசடி’ முந்தைய அரசாங்கத்தின் போது நடந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்