2024இல் பிரதமர் பதவிக்கு ஆசையில்லை.! பாஜக ஆட்சியமைக்க கூடாது.! மம்தா பேனர்ஜி அறிவிப்பு.!
2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு ஆசையில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகம் ஏன் தங்களுக்கு வாக்களியுங்கள் என்பதை தாண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என மறைமுக பிரச்சாரம் கூட ஆரம்பித்து விட்டனர்.
ஆளும் கட்சியினர் 34 கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய ஜனநாயக கூட்ட்டணி என்றும், எதிர்க்கட்சியினர் இந்தியா என தங்கள் கூட்டணிக்கு பெயர் வைத்தும் தேர்தல் வேளைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பிரதான பெரிய கட்சியாகவும், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளனர்.
இதில் அண்மையில் பெங்களூருவில் நடந்து முடிந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் விருப்பமில்லை என்று தெரிவித்தார். அதனை தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
நேற்று அதே போல கருத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பேசுகையில், தனக்கு எந்த நாற்காலிக்கும் ஆசை இல்லை என்றும், ஆனால் பாஜக ஆட்சியை இந்தியாவில் இருந்து அகற்றுவதற்கு எதிராக தான் போராட தயாராக இருப்பதாகவும் கூறினார். தனக்குப் பிரதமராக விருப்பம் இல்லை, ஆனால் காவி கட்சி (பாஜக) ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அந்த கூட்டத்தில் மம்தா கூறியுள்ளார்.