தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு!
குறைந்த மழைப் பொழிவினால் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
2022-ல் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த பகுதிகள்:
- சிவகங்கை – தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை.
- புதுக்கோட்டை – ஆவுடையார்கோவில், மணமேல்குடி.
- ராமநாதபுரம் – போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.
- தென்காசி – ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்.
- தூத்துக்குடி – ஆள்வார்திருநகரி.
- விருதுநகர் – நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.