செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

SenthilBalaji SCourt Case

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வழக்கை உடனடியாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் முறையிட்டார்.

வழக்கை நாளைக்குள் விசாரிக்காவிட்டால் மனு அர்த்தமற்றதாகி விடும் என்றும் கபில் சிபில் விளக்கமளித்தார். கபில் சிபில் வேண்டுகோளை ஏற்று செந்தில் பாலாஜி வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரிக்கிறது. இதுபோன்று, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உடனடியாக விசாரிக்க அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா முறையிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்