வரும் 27ம் தேதி பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம்…!

வரும் 27ம் தேதி பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 27ம் தேதி பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘எதிர்வரும் 27.07.2023 முற்பகல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனை விற்கும் தொழில் புரியும் அனைத்து கூட்டமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம், என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
