அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்கிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வருகின்ற 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்