Sensex :சாதனை படைத்த சென்செக்ஸ்..!
இன்றைய வர்த்தக நாளில் 66,905 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 302.30 புள்ளிகள் உயர்ந்து 67,097.44 என நிறைவு செய்துள்ளது.இதுவே முதல் முறையாக 67,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 83.90 புள்ளிகள் உயர்ந்து 19,833.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,795 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,749 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.