கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி திட்டம் – விளக்கமளித்த தமிழக அரசு..!

tamilnadu govt

கர்ப்பிணிகளுக்கு விரைவில் நிலுவையில் உள்ள நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்ப்பிணிகளின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முடக்கியுள்ளது. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது; நிதி கர்ப்பிணிகளுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. மத்திய அரசின் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக மறுபதிவேற்றத்தில் காலதாமதம் ஏற்படுகிறது . கர்ப்பிணிகளுக்கு விரைவில் நிலுவையில் உள்ள நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.3000, மாநில அரசு சார்பில் ரூபாய்.2000 வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000 தமிழக அரசு வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிப்பதில் சிறிது கால தாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.  இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் 2018 முதல் 2023 வரை தமிழக அரசு சார்பில் ரூ.243 கோடி ஒதுக்கப்பட்டுரூ.178 கோடி செலவிடப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror