அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – அமலாக்கத்துறை மனு இன்று விசாரணை!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை.
கடந்த 2002-2006ம் ஆண்டில் அதிமுகவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 சொத்து சேர்த்ததாக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
சொத்து குவிப்பு வழக்கு:
தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்று அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைத்தது. இதனால், அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது.
சொத்துகள் முடக்கம்:
வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார் ரூ.6 மதிப்பிலான சொத்துகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அமலாக்கத்துறை மனு:
இதில், அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு பின்னர் இடைக்கால தடை நீக்கப்பட்டது. இருப்பினும், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அமலாக்கத்துறை தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது.
ED மனு இன்று விசாரணை:
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு இயக்குநரகதுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் அமலாக்கத்துறை மனுவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி நீதிமன்றம்:
அதன்படி, சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் 80% விசாரணை முடிந்த நிலையில், ஏப்ரல் 18-ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரிக்கிறது.
அமலாக்கத்துறை ரெய்டு:
சொத்து குவிப்பு வழக்கில் உதவுவதற்காக, அமலாக்கத்துறை செய்திருந்த மனு மீது இன்று முடிவெடுக்கவிருக்கிறது தூத்துக்குடி நீதிமன்றம். அமலாக்கத்துறையின் சார்பில், மூத்த வழக்கறிஞர் ரமேஷ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிறார். சமீபத்தில் திமுகவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அவர் கைதும் செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையின் அடுத்த மூவ்:
இதையடுத்து, திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் கடந்த இரு தினங்களாக நாள் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். பொன்முடி மற்றும் அவரது மகனிடம் அமலாக்கத்துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களை இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று விசாரணை நடைபெற உள்ளது.