கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!
மத்திய அமெரிக்காவின் நிகரகுவா முதல் கவுதமாலாவின் பெரும்பகுதியை நிலநடுக்கம் உணர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, குறிப்பாக கவுதமாலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல் சால்வடாரின் பசிபிக் கடற்கரையில் இன்று அதிகாலை 5:50 மணியளவில் 70 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்ட்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதாரம் குறித்து தகவல்கள் இல்லை. இதுவரை சுனாமி எதுவும் விடுக்கப்படவில்லை என்று எல் சால்வடாரின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.