NDA என்பதற்கு புது விளக்கமளித்த பிரதமர் மோடி..!

PMModiNDA MeetDelhi

N – புதிய இந்தியா, D – நாட்டின் வளர்ச்சி நாடு A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம் என NDA-க்கு பிரதமர் மோடி விளக்கம்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில்,பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, NDA என்பதற்கு புது விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, N – புதிய இந்தியா, D – நாட்டின் வளர்ச்சி நாடு A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். N – New India, D – developed Nation A – aspirations of people and region. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என பெயரிட்டு இருந்த நிலையில், பிரதமர் மோடி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், என் டி ஏ கூட்டணிக்கு தேசம் தான் முதலில் முக்கியம். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதும் தான் என் டி ஏ கூட்டணிக்கு முக்கியம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நேர்மறையான அரசியலையே முன்னெடுத்தோம்.

முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளி கண்டு வருகிறோமே தவிர மக்கள் தீர்ப்பை அவமதிக்கவில்லை. ஆளும் அரசுகளுக்கு எதிராக ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளின் உதவிகளை நாடியதில்லை. மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் என்டிஏ செயல்படுகிறது. யாரையும் எதிர்ப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படவில்லை.

அரசியல் கூட்டணிக்கு நாட்டில் மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது. ஸ்திரத்தன்மையுடன் நடைபெறும் ஆட்சியே இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை பிறக்க காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்