பிரிஜ் பூஷன் சரண் சிங்-க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

BJP MP Brij Bhushan Sharan Singh

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்.

மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரணுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிஜ் பூஷன் சிங் ரூ.25,000 ஜாமீன் தொகை செலுத்தவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யவில்லை என நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷன் சிங் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். மேலும், வரும் வியாழக்கிழமை (ஜூலை20) வழக்கமான ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்போது, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீண்டும் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்