பரபரப்பு…! அமெரிக்க விமானம் அருகே பறந்த ரஷ்ய போர் விமானம்!
சிரியாவின் வான்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த அமெரிக்க விமானம் அருகே ரஷ்யாவின் போர் விமானம் பைட்டர் ஜெட் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிரியாவில் உள்நாட்டு போர் ஓய்ந்தபாடு இல்லை. இந்த போரில் சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா ஆதரவு அளித்து வரும் நிலையில், சிரியாவின் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான MC-12 ரக போர் விமானம் சிரியா வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியாவின் SU-35 ரக போர் விமானம் அருகே மோதும் வகையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2 வாரங்களில், பலமுறை ரஷ்ய போர் விமானங்கள், அமெரிக்க டிரோன்களுக்கு அருகே ஆபத்தான முறையில் பறந்துள்ளது. அமெரிக்கா தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, சிரியாவின் வான்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.