அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. இதுவரை நடந்தது என்ன?

Tamilnadu Minister Ponmudi

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவள துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் பகுதியில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக கூறி மறைந்த முன்னாள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில்  2011-ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

செம்மண் குவாரி முறைகேட்டில் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாக கூறி நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி வீடு அலுவலங்களில் சோதனையை தொடங்கினர். விழுப்புரத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை விசாரணை:

இந்த வழக்கின் பேரில், விழுப்புரம் மற்றும் சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, கல்வி நிறுவனங்கள், கௌதம் சிகாமணி அலுவலகம், அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை உட்பட அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

Minister Ponmudi
Minister Ponmudi [Image source : PTI]

தடய அறிவியல் சோதனை:

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மட்டுமில்லாமல், தடய அறிவியல் சோதனையும் நடைபெற்றுள்ளது. கணினியில் இருந்த ஆவணங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களை தடயவியல் நிபுணர்கள் சரி பார்த்துள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த வாகனங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

பொருளாதார தடவியல் பிரிவு: 

அமைச்சர் பொன்முடி வங்கி கணக்குகள் மூலமாகவோ, அவர் தொடர்புடையவர்கள் மூலமாகவே டிஜிட்டல் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என்பதை ஆராய டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் பொருளாதார தடவியல் பிரிவினர் சோதனை நடத்தியதாகவும், அதேபோல், வங்கியில் மேற்கொண்டுள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக வங்கி அதிகாரிகளும் சென்றிருந்தனர். நகை மதிப்பீடு செய்யக்கூடிய, வங்கி நகை மதிப்பீட்டாளர்களும் சென்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Minister Ponmudi
Minister Ponmudi [Image source : The HIndu]

பறிமுதல்:

இதனிடையே, விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீட்டில் பீரோ, லாக்கர்களுக்கு சாவி இல்லாததால் போலி சாவி மூலம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனையில், ஆரம்பத்தில் 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் உட்பட ரூ.70 லட்சம்  ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின.

பொன்முடியை அழைத்து சென்ற ED:

இதனை தொடர்ந்து, சுமார் 13 மணிநேர சோதனைக்கு பிறகு, அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் பொன்முடியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மகன் கெளதம் சிகாமணி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார்.

அமைச்சர் பொன்முடிக்கு சம்மன்: 

நேற்று இரவு 8 மணியளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி இன்று அதிகாலை 3 மணிக்கு தான் விடு திரும்பினார். முதலில் அவர் கைது செய்ப்பட்டு அழைத்து செல்லப்படுகிறாரா என்கிற கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்லப்பட்டார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்:

இதனிடையே, பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை கைப்பற்றப்பட்டதாகவும், வைப்புத் தொகை தவிர்த்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்ததாகவும் தனியார் ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்