மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்.. நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

scooters for disabled people

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. 

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க ரூ.4.50 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  500 பேருக்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் பயனாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளது.  இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் தவிர ஏனைய இருசக்கர வாகனங்களை இயக்க இல்லாதவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருகால் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது விபத்து மற்றும் இதர காரணங்களால் 60% க்கும் மேல் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலியோவால் ஒருகால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

scooters

[Image Source : Twitter/@Nandhini_Twits]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh