பரபரப்பு : அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை…!
மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுக கவுன்சிலர் சந்திர பாண்டியன் வெட்டி கொலை.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நான்காவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் சந்திர பாண்டியன். இவர் மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சமத்துவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிமுக கவுன்சில சந்திர பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் அதிமுக கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.