பாஜகவின் ஜனநாயக விரோத தந்திரங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்பது அவசியம் – முதல்வர் மு..ஸ்டாலின்

CM Stalin UCC

பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு, கர்நாடகாவின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் ஒரு சக்திவாய்ந்த உதாரணம் என முதல்வர் ட்வீட்.

கடந்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் , ஆம் ஆத்மி என 15 எதிர்க்கட்சிகள் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அந்த கூட்டத்தை அடுத்து இன்று மற்றும் நாளை பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்ணஆட்டக்கா சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘இந்த முக்கியமான தருணத்தில், பாஜகவின் ஜனநாயக விரோத தந்திரங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு, கர்நாடகாவின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் ஒரு சக்திவாய்ந்த உதாரணம். இதை தேசிய அளவில் பிரதிபலிப்போம். ஒன்றாக, ஜனநாயகத்தை பாதுகாப்போம் மற்றும் நமது சிறந்த தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்