பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை..!
பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 85 வரை அதிகரித்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி உருவானது.
இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்ததால், விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணை நிறுவனங்கள் கடந்த இருவாரமாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக(ஜூன் 12) தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுன் 13) எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.