29 மாவட்டங்களில் பருத்தி இயக்கம் – ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

TNgovt

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக 29 மாவட்டங்களில் செயல்படுத்திட ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.

நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு, நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கடந்தது ஆண்டு பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது, 2023-2024-ஆம் ஆண்டிற்கான பருத்தி இயக்கம் என்ற தலைப்பில் வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில், நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிட, பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில் ‘பருத்தி இயக்கத்தை’ 29 மாவட்டங்களில் செயல்படுத்திட ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உழவன் செயலியில் முன்பதிவு செய்து அதன் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்