எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன..! எஸ் ஜெய்சங்கர்
சமீபத்தில் எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் வன்முறை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மியான்மரின் இராணுவ ஆட்சித் தலைவரும், வெளியுறவு அமைச்சருமான யு தான் ஸ்வேயை, பாங்காக்கில் நேற்று நடைபெற்ற மீகாங் கங்கா ஒத்துழைப்பு (எம்ஜிசி) கூட்டத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது நமது எல்லைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டிய அவர், சமீபத்தில் எல்லைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு செயல்களும் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், மியான்மரில் ஜனநாயக மாற்ற செயல்முறைக்கு இந்தியா ஆதரவளிக்கிறது மற்றும் நாட்டில் அமைதி திரும்புவதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இது தொடர்பாக, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் (ஆசியான்) எங்களது கொள்கையை நெருக்கமாக ஒருங்கிணைப்போம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
Met H.E. U Than Swe on the sidelines of the Mekong Ganga Cooperation (MGC) meeting in Bangkok today.
Our discussions focused on connectivity initiatives that have a larger regional significance. These will also be discussed at the MGC meeting this afternoon. Stressed the… pic.twitter.com/vaOoa0RAFL
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 16, 2023