கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் – மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun kharge

எதிர்க்கட்சியினரை மிரட்டவும், பிரிக்கவும் மோடி அரசு கையாளும் யுக்தியே அமலாக்கதுறை சோதனை என கார்கே ட்வீட்.

பெங்களுருவில் இன்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சியினரை மிரட்டவும், பிரிக்கவும் மோடி அரசு கையாளும் யுக்தியே அமலாக்கதுறை சோதனை.

ஆச்சரியம் என்னவென்றால், சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தில் பாஜக திடீரென எழுந்துள்ளது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயத்திற்கு எதிராக நடைபெறும் இந்த கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்