இந்தியாவுக்கே ஆபத்து வந்துருக்கிறது… சோதனை கண்டு கவலையில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Tamilnadu MK Stalin

தன் மீதான வழக்குகள், சோதனைகளை அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என முதலமைச்சர் பேட்டி.

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம்  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. இந்த கூட்டமானது காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்:

Patna Opposition Parties Meeting
Patna Opposition Parties Meeting [Image source : ANI]

கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இன்று நடைபெற உள்ள 2வது கூட்டத்தில் 20 கட்சிகள் பங்கேற்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில், பெங்களுருவில் நடைபெற உள்ள எதிரிக்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி:

mk stalin
opposition parties meeting [Image Source : PTI]

எதிரிக்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளோம்.

திசை திருப்பவே சோதனை: 

பெங்களுருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார். இதன்பின் பேசிய முதல்வர், எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை. அமலாக்கத்துறையின் சோதனையை கண்டு கவலைப்படவில்லை. பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுகள் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை.

Minister Ponmudi
Minister Ponmudi [File Image ]

13 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட வழக்கை கையில் எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் வேலை சுலபம்:

Tamilnadu CM MK Stalin
Tamilnadu CM MK Stalin [Image source : PTI]

வட மாநிலங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை, பொன்முடி மீது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். இதுபோன்ற சோதனைகளால் தமிழ்நாட்டில் எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும் என்றார்.

ஆளுநர் பரப்புரை – இந்தியாவுக்கு ஆபத்து:

Tamilnadu Governor RN Ravi
Tamilnadu Governor RN Ravi [Image source : PTI]

ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காக பரப்புரை செய்யும் நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது. பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. தன் மீதான வழக்குகள், சோதனைகளை அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக எதிர்கொள்வார். இந்தியாவுக்கே ஆபத்து வந்துருக்கிறது, அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. அமலாக்கப்பிரிவு சோதனைக்கெல்லாம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பதில் தர இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை சோதனை:

Minister Ponmudi
Minister Ponmudi [File Image]

மேலும், மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம் எனும் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டமே நடைபெறுகிறது, காவிரி பிரச்சனை தொடர்பான கூட்டம் இல்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  இதனிடையே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சரின் மகன் கெளதம் சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்