பணத்துக்காக கடத்தப்பட்ட 2 தொழிலதிபர்கள் மீட்பு..!
ஹரியானாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தொழிலதிபர்களை உத்தரப்பிரதேச போலீசார் அதிரடியாக மீட்டனர்.
சோஹனா நகரைச் சேர்ந்த சித்தார்த் மற்றும் பிரவீண் ஆகியோர், 20 லட்சம் ரூபாய் பண பாக்கிக்காக மற்றொரு தொழில் அதிபரான கவுரவ் சிங்கால் ஏவப்பட்ட கூலிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தொலைபேசி உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்ததில், கிடங்கு ஒன்றில் இருவரும் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கடத்தியவர்களை இடம் மாற்ற முயன்றபோது, போலீசார் விரைந்து செயல்பட்டு தொழிலதிபர்கள் இருவரையும் மீட்டனர். ஆயினும், கடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.