கண்ணே கலங்கிடுச்சி! சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்…வைரலாகும் வீடியோ.!!

SuriyaSivakumar

நடிகர் சூர்யாவும் அவருடைய தந்தை சிவகுமாரும்  அகரம் அறக்கட்டளை மற்றும் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் பல நல்ல உதவிகளை மாணவர்களுக்கு செய்து வருகிறார்கள். அந்த வகையில். சிவக்குமார் கல்வி  அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12-ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா இன்று  வழங்கினார்.

இதற்கான விழா ஒன்றும் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்திக் என பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் மூன்று பேரும்  மாணவ, மாணவியர்களுக்கு நடுவே நாற்காலி போட்டுகொண்டு அமர்ந்திருந்து  புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், அப்போது சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும்  கண்கலங்க வைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- கல்வி மூலமா வாழ்க்கை… வாழ்க்கை மூலமா கல்வியை படிங்க! நடிகர் சூர்யா அட்வைஸ்.!

புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, பின்னே நின்று கொண்டிருந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்துவிட்டு பின்னால் நின்று கொண்டிருந்த மாணவ மாணவியர்களுடன் நின்றுகொண்டார். இது தொடர்பான நெகிழ்ச்சியான அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்