வரி செலுத்துவோருக்கு நற்செய்தி; இனி 7.27 லட்சம் வரை வருமான வரி கிடையாது; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!
மத்திய நிதியமைச்சர் சீதாராமன், அறிவித்துள்ள புதிய அறிவிப்பின் படி, இனி ஆண்டுவருமானம் ரூ.7.27 லட்சம் வரை வரி செலுத்தவேண்டாம்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியைப்பற்றி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மக்களுக்கான பல வரிசலுகைகளை நமது அரசு வழங்கி வருகிறது என்று கூறினார், மேலும் வரிவிதிப்பில் புதிய அறிவிப்பினையும் வெளியிட்டார். அதன்படி இனி ஆண்டுவருமானம் 7.27 லட்சம் வரை வரிசெலுத்தவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது சில இடங்களில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் குழுவாக எடுத்த முடிவு தான் தற்போது, 27,000 ரூபாயில் நீங்கள் கூடுதல் வரி செலுத்தும் பிரேக் பாய்ன்ட் வருவதாகக் குறிப்பிட்டு 7 லட்சத்திலிருந்து 7.27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
✅Under the new regime, there is no income tax to be paid for annual income up to Rs 7 lakh, which effectively increases to Rs 7.27 lakh with marginal relief provisions.
✅A standard deduction of Rs 50,000 has also been introduced under the new income tax regime.
✅There has… pic.twitter.com/xsfQYwGmDv
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) July 14, 2023
இது தவிர வெளியான மற்ற முக்கிய அறிவிப்புகளாவன,
- புதிய வருமான வரிவிதிப்பில், இனி ரூ.7.27 லட்சம் வரை ஆண்டுவருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.
- புதிய வருமான வரி முறையின் கீழ் 50,000 ரூபாய்க்கான நிலையான விலக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இந்த விலக்கு தனிநபரின், ஓய்வூதியதரரின் வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ.50,000 வரையில் குறைக்கிறது, பழைய வரிவிதிப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)
- ஒரு நாளுக்குள் செயலாக்கப்பட்ட வருமானவரியானது கடந்த ஆண்டை விட மொத்த சதவீதத்தில் 100% அதிகரித்துள்ளது.
- மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவுக்கான விலக்கு ரூ.30,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (இதன் மூலம் இனி 50,000 ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு பெற்றுக்கொள்ளலாம்)
- உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.