12 வயது சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை!

head reattached

நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி மறுவாழ்வு அளித்து இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

ஒரு அற்புதமான மருத்துவ சாதனையில், இஸ்ரேலிய மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது, 12 வயது சுலைமான் எனும் அரேபிய சிறுவனுக்கு 12 மணி நேர அறிவை சிகிச்சை செய்து, மீண்டும் தலையை உடலுடன் பொருத்தி உயிரை காப்பாற்றி இஸ்ரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சுலைமான் ஹாசன் என்ற சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கார் மோதியது. இந்த விபத்தில் அவரது தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காயத்தின் தீவிரம் என்னவென்றால், அவரது மண்டை ஓட்டின் பின்புறத் தளத்தை வைத்திருக்கும் தசைநார்கள் கடுமையாக சேதமடைந்து, அது அவரது முதுகுத்தண்டின் மேல், முதுகெலும்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.

பின்னர் அந்த சிறுவன் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனது தலையை உடலில் மீண்டும் பொருத்த இஸ்ரேலிய மருத்துவர்களால் 12 மணிநேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஹடாசாவில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஓஹாட் ஐனாவ் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக அரேபிய சிறுவன் சுலைமானுக்கு நீண்ட நேர அறிவை சிகிச்சை செய்து, மீண்டும் தலையை உடலுடன் பொருத்தி உயிரை கைப்பற்றினர் இஸ்ரேலிய மருத்துவர்கள். உடல் தகுதி பெற்று இந்த வாரம், சுலைமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி இந்த அற்புதமான, அதிசயமான மருத்துவ சாதனையை இஸ்ரேலிய மருத்துவர்கள் படைத்துள்ளனர்.

சிறுவனின் தந்தை உயிரை காப்பாற்றி தனது மகனுக்கு மறுவாழ்வு கொடுத்த  மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் எனது ஒரே விலைமதிப்பற்ற மகனைக் காப்பாற்றியதற்காக என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் எனவும் கூறியதாக இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஓஹாட் ஐனாவ் கூறுகையில், அறுவை சிகிச்சை அறையில் ஹாசனின் உயிருக்கு மருத்துவர்கள் போராடினர். அவர்களின் நிபுணத்துவம் மற்றும் விரைவான முடிவெடுப்பது சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது. சிறுவனை காப்பாற்றுவதற்கான எங்கள் திறன் எங்கள் அறிவு மற்றும் அறுவை சிகிச்சை அறையில் உள்ள மிகவும் புதுமையான தொழில்நுட்பத்திற்கு நன்றி.

மேலும், அறுவை சிகிச்சை ஜூன் மாதம் நடந்தது, ஆனால் ஜூலை வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அத்தகைய சிறுவனுக்கு நரம்பியல் குறைபாடுகள், உணர்திறன், உறுப்பு செயலிழப்பு இல்லை என்பதும், அவர் சாதாரணமாக செயல்படுவதும், இவ்வளவு நீண்ட செயல்முறைக்குப் பிறகு உதவியின்றி நடப்பதும் சிறிய விஷயமல்ல எனவும் குறிப்பிட்டார்.

சிறுவனின் வயது காரணமாக அவரது மருத்துவ குழு கூடுதல் சவாலை எதிர்கொண்டதாக ஐனாவ் மேலும் குறிப்பிட்டார். இது பொதுவான அறுவை சிகிச்சை அல்ல, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு அல்ல. இதைச் செய்வதற்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு அறிவும் அனுபவமும் தேவை. அறுவை சிகிச்சையின்போது, ஹாசனின் தந்தை பக்கத்திலேயே இருந்தார். மருத்துவ ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் எனவும் கூறியுள்ளார்.

கடந்த மாதம், சுலைமான் என்ற 12 வயது பாலஸ்தீனிய (UAE) சிறுவன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பயங்கர கார் விபத்தில் சிக்கினான். அந்த விபத்தில், அவரது கழுத்தில் இருந்து தலை துண்டிக்கப்பட்டபோது, உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வாரம், சுலைமான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்