அரசு மருத்துவமனை திறப்பு விழா – நாளை மதுரை செல்கிறார் முதல்வர்!

KalaignarLibrary - MKStalin

மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் நூலகம், அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். நாளை காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, பின் அன்றிரவு சென்னை திரும்புகிறார்.

முதல்வரை வரவேற்கும் விதமாக தென்மாவட்ட அமைச்சர்கள் மதுரை முழுவதையும் அலங்கரிக்க ஆரம்பித்துள்ளனர். மதுரையில் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிரமாண்ட நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், சர்வதேசத் தரத்தில் ரூ.215 கோடி ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் தாயர் நிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்