செந்தில் பாலாஜி விசாரணை தொடக்கம்; அமலாக்கத்துறைக்கு காவல்துறை அதிகாரம் இல்லை… வாதங்கள் முன்வைப்பு.!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் 3-வது நீதிபதி அமர்வு கீழ் விசாரணை தொடங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகின்றனர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், அமலாக்கத்துறையினருக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், சம்மன் அனுப்புவதற்கும் சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனையின் போது விசாரிக்கலாம், வாக்குமூலம் பெறலாம் எனவும் உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.