இது கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin 1000rs Women

பொது சிவில் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும் என முதல்வர் ட்வீட். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிடக்கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர், ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வர் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் தனித்துவமான மத, பண்பாட்டு அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரே மாதிரியான பெரும்பான்மைச் சமூகத்தை அமைப்பதற்கான முயற்சியாகவே அமையும்.

இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும், சமூக ஒருங்கிணைப்புக்கும் வேட்டு வைக்கும். நம் நாட்டின் வரலாற்றுப் பின்னணி எதையும் கருத்தில் கொள்ளாமல் UCC செயல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர முயல்வதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்! இந்தியாவின் பன்முகத்தன்மைதான் அதன் வலிமை! வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, சமூக நல்லிணக்கம் காப்போம்!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்