காமராஜர் பிறந்த நாளில் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் – புஸ்ஸி ஆனந்த்

Actor Vijay

காமராஜர் பிறந்தநாளில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என  புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் “தளபதி விஜய் பயிலகம்” ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vijay payilakam
vijay payilakam

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்