ஸ்டாலின் சொன்னா காங்கிரஸ் எதைவேண்டுமானாலும் கேட்கும் – கே.எஸ்.அழகிரி
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி படுமோசமான ஆட்சி. எல்லா துறைகளிலும் தோல்வியை தான் சந்தித்தார்கள் என கே.எஸ்.அழகிரி பேட்டி.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் ஸ்டாப்களின் சொல்வதை காங்கிரஸ் கட்சி கேட்கும். ஆனால், அதற்கு அண்ணாமலை ஒன்று செய்ய வேண்டும்.
அது என்னவென்றால், பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது தான் மேகதாதுவில் வரைவு திட்டத்துக்கு, நீர் மேலாண்மைத்துறை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், அந்த வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு அண்ணாமலை அவர்கள் மத்திய அரசை கண்டித்து, அறிக்கை கொடுத்தால், நீங்கள் சொல்வதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்க தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை, காமராஜர் பிறந்தநாளில் திறப்பது பாராட்டத்தக்கது. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி படுமோசமான ஆட்சி. எல்லா துறைகளிலும் தோல்வியை தான் சந்தித்தார்கள். வரும் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தற்போது, பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது இந்துக்களிலேயே சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்துள்ளார்.