திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும் – முதலவர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும் முதல்வர் ட்வீட். 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் – அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆயின் ஆலோசனை கூட்டத்தில், மக்களின் அன்றாட தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் காவல்துறையில் பெறப்படும் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தலுக்கு முன்பு  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதல்வரின் முகவரி என உருப்பெற்றது.

அதன் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில், இன்று இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் – வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் உரையாடி – அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும்!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்