மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான NExT தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு!
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிவைப்பு.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான NExT தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இளநிலை மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரவும், பயிற்சி மேற்கொள்ளவும் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தநாடு தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம்.
2019-ஆம் ஆண்டு பேட்ச் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி பிரதமருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் நெக்ஸ்ட் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார் முதலமைச்சர்.