ஆர்.டி.ஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு!
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு.
சென்னையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீனம்பாக்கம், செங்குன்றம் உட்பட அனைத்து வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், அரசு ஊழியர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஏதுவாக சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.