சர்வதேச அளவில் 700 விக்கெட்கள்.! டெஸ்ட் தொடரில் அஸ்வின் படைத்த அசத்தல் சாதனை.!

R ASHWIN

சர்வதேச அளவில் 700 விக்கெட்கள் வீழ்த்திய 3வது இந்திய வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

நேற்று மேற்கிந்த தீவு கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 24.3 ஓவர்கள் வீசி 6 ஓவர்களில் ரன்கள் விட்டுக்கொடுக்காமல், மொத்தமாக 60 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சர்வதேச அளவில் 700 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

முதல் இடத்தில் முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்