#BREAKING: செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை காவல் நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது சென்னை முதனமை அமர்வு நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 26-ஆம் தேதி நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில், இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்றம் காவலை நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்று காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.