ஆஷஸ் கிரிக்கெட்டை வைத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய பிரதமர்கள் ஜாலியான சண்டை; வைரலாகும் வீடியோ.!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் ஆஷஸ் தொடரை வைத்து ஜாலியாக சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் ரிஷி சுனக், மற்றும் அந்தோணி அல்பனீஸ் இருவரும் நேட்டோ மாநாட்டின் சந்திப்பில் கலந்து கொண்டபோது, இரு பிரதமர்களும் நடந்து வரும் ஆஷஸ் தொடரை வைத்து ஒருவரையொருவர் ட்ரோல் செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
And of course we discussed the #Ashes pic.twitter.com/FeKESkb062
— Anthony Albanese (@AlboMP) July 11, 2023
இந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முதலில், ஒரு காகிதத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டினார், இதையடுத்து ரிஷி சுனக், இங்கிலாந்து அணிவீரர்கள் 3-வது ஆஷஸ் டெஸ்டில் வெற்றியுடன் வரும் புகைப்படத்தை எடுத்து காட்டுவார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்தோணி அல்பனீஸ், 2-வது டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோ, ரன் அவுட் ஆன போட்டோவை எடுத்து காட்டுவார், இதற்கு ரிஷி சுனக் நான் 2018இல் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்த புகைப்படத்தை எடுத்துவரவில்லை என ஜாலியாக கூறினார், இந்த வீடீயோவை ஆஸ்திரேலிய பிரதமர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.