ஆசிய கோப்பை 2023: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது.. விரைவில் இறுதி அட்டவணை – பிசிசிஐ நிர்வாகி தகவல்!

asia cup 2023 india

ஆசிய கோப்பை 2023 அட்டவணை இறுதி செய்யப்பட்டதாகவும் பிசிசிஐயின் நிர்வாகி அருண் துமல் தகவல்.

2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது. ஆசிய கோப்பை தொடரில் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றனர்.

ஆசியக்கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ மறுத்ததை அடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற உள்ளது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்பதை பிசிசிஐ நிர்வாகி அருண் துமல் உறுதி அளித்துள்ளார். ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை சுற்றி சர்ச்சைகள் சுழலும் நிலையில், ஐபிஎல்-ன் தற்போதைய தலைவரான அருண் துமால், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்றும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் என கூறினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும். பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் 4 போட்டிகள் இருக்கும், அதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் 2 போட்டிகள் உட்பட இலங்கையில் 9 போட்டிகள் நடைபெறும். மேலும் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் 3வது போட்டியும் அங்கு நடைபெறும்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிபி தலைவர் ஜகா அஷ்ரப்பை சந்தித்த பிறகு ஆசிய கோப்பை 2023 அட்டவணை இறுதி செய்யப்பட்டதாகவும் பிசிசிஐயின் அருண் துமால் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கான இறுதி அட்டவணை ஜூலை 14ல் வெளியாகிறது எனவும் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

இந்த வருடத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை சந்திக்கும் வாய்ப்பு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் நடைபெறும் ODI உலகக் கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளும் ஆசியக் கோப்பையில் களமிறங்கும். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்