10 ரூபாய் கொடுத்து 5,000 ரூபாய் போச்சு..! ஹனுமான் கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

HanumanTempletheft

ஹரியானாவில் உள்ள ஹனுமான் கோவிலில் திருடன் ஒருவன் ரூ.5,000 திருடி தப்பிச் சென்றுள்ளார்

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் இருந்து, திருடன் ஒருவன் உண்டியல் பெட்டியை உடைத்து ரூ.5,000 பணத்தை திருடிச் சென்றுள்ளான். திருடிவிட்டு அனுமனுக்கு பூஜை செய்து ரூ.10 நோட்டை வைத்துவிட்டு தப்பு சென்றுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அவர் திருடுவதற்கு முன்னதாக, ஹனுமான் சாலிசாவை சுமார் பத்து நிமிடங்கள் ஓதி, களிமண் விளக்கை ஏற்றி வைத்துள்ளார். பின் கருவறையில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உண்டியல் பெட்டியை உடைத்து, ரூ.5,000-தை எடுத்து தப்பிச் சென்றுள்ளார்.

திருட்டு நடந்ததை அறியாத கோவில் பூசாரி கோயில் கதவை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்டுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது, ​​உண்டியல் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்