நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் காலமானார்.!
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் காலமானார்.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹாலின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதா தஹால் அண்மையில் வீடு திரும்பினார். இன்று காலை ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் காத்மாண்டுவில் உள்ள நார்விக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டாலும், சிகிச்சை பலனின்றி, காலை 8.33 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.