போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்தினார் நடிகர் விஜய்!

ActorVijay

போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து காவல்துறை நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பு.

சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார். 37 மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் 350 பேரை விஜய் சந்தித்ததாகவும், 3 நாட்கள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், விடுபட்டவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் மக்கள் இயக்க பணிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும், அரசியல் வருகை குறித்து விஜய் பேசியதாகவும் நிர்வாகிகளில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்னோவா காரில் நடிகர் விஜய் புறப்பட்டு பனையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ரசிகர்கள் அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இதனால், அக்கரை ஜங்ஷன் போக்குவரத்து சிக்னலில் விதிகளை மீறி நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றதாக கூறப்பட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோ வைரலானது.

இதையடுத்து, போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து காவல்துறை நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை நடிகர் விஜய் செலுத்தியுள்ளார். இசிஆர் சாலை, அக்கரை பகுதி சிக்னலில் விஜய்யின் கார் நிற்காமல் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து, ரூ.500 அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தினார் நடிகர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்