நிலச்சரிவில் வாகனங்கள் நசுங்கி 4 பேர் பரிதாபமாக பலி.!

landslide

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில், பெரிய பாறைகள் உருண்டு விழுந்து வாகனங்கள் மீது விழுந்து நொறுக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கங்கோத்ரியில் இருந்து உத்தரகாசிக்கு காரில் பயணித்த யாத்ரீகர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மழைக்காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு யாத்திரிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கனமழை காரணமாக பந்தர்கோட் அருகே கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கையால், டேராடூன், டெஹ்ரி, சாமோலி, பவுரி, பாகேஷ்வர், நைனிடால், அல்மோரா மற்றும் ருத்ரபிரயாக் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்