விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு .!
சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்னும் சற்று விஜய் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், அந்த ஆலோசனை பிற்பகல் தொடங்கப்பட்டு கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன.? எனவும், அவர்களுடைய நலனை கேட்டறிந்தும் அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக கடந்த மாதம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.