கோடநாடு வழக்கு – முதற்கட்ட அறிக்கை 28ல் தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு!
கோடநாடு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்ய அனுமதி கோரி சிபிசிஐடி மனு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடந்த விசாரணையை வரும் 28-ஆம் தேதி இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை அடிப்படையில் அறிக்கையை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
மேலும், கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களை ஆய்வு செய்ய அனுமதி கோரியும் சிபிசிஐடி மனு அளித்துள்ளது. அதன்படி, கனகராஜ், அவரது சகோதரர் தனபால் உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு செல்போன்களை அனுப்ப அனுமதி கோரி உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.