லக்கிம்பூர் கேரி சம்பவம்; மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமின் நீட்டிப்பு- உச்சநீதிமன்றம்.!
லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு, மேலும் ஜாமீனை செப்-26 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2021ம் ஆண்டு லக்கிம்பூர் கேரி பகுதியில் 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு வரும் செப்டம்பர் 26 வரை ஜாமின் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஆஷிஸ் மிஸ்ரா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு, முதன்முறையாக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது மேலும் ஒரு வாரத்திற்குள் உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறும், பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தியது. தற்போது இந்த வழக்கில் மேலும் செப்டம்பர் 26 வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.