காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து மாணவியின் பயத்தை போக்கிய டிஎஸ்பி…!
போலீஸ் என்றாலே பயம் என கூற, மாணவியை காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து பயத்தை போக்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் டிஎஸ்பி மனோஜ் குமார் அவர்கள், ‘இமைகள்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவிகளை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார்.
அங்கு மாணவர்களுக்கு காவல்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அங்கு வந்த மாணவி ஒருவர், போலீஸ் என்றாலே பயம் என கூற, அவரை காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து பயத்தை போக்கினார்.